Sunday, July 12, 2009

சௌராஷ்ட்ர பாடல்கள் - ஜக3து அளினும் ஸிம்ஹுக

கீ3த்: ஜக3து அளினும் ஸிம்ஹுக
ஒத்3தி3து : சௌராஷ்ட்ர பாடல்கள்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)

பாடல்: உலக பெண்களில் சிங்கமாய்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)


ஜக3து அளினும் ஸிம்ஹுக

நொவ்ரிக அவத்த அளி கோனு – மொன்னு
பொ4வ்ரி ஐகய்ஹா ஸங்கெ தா4னு (நொவ்ரிக)

கு3ணவதி ஸொக குங்கும் க4ல்லய்ஹா – அம்ர
கொப்பான் தே3வுனுகு பாய்ம் பொள்ளய்ஹா (நொவ்ரிக)

வெக்கிஹெடெ3 மொதி ஸொக3
லிக்கி ரியெ நீதி ஸம்பு
ர:க்கி ரீ:கின் இகித்தெனொஹா
துக்கி மொன்னும் தொவ்லிரித்தெனாஹா (நொவ்ரிக)

தே3ஸு ப4க்திம் பெ4ளி தீ4ருக
சித்தூர் ராணி பத்மினிக
ஜக3து அளினும் ஸிம்ஹுக
ஜான்ஸி ராணி ஸொக ரா:ய்ஹா (நொவ்ரிக)

வாஞ்சனா மாயி ஸொக
வத்தாம் தூ3து ச்ஸொக
பொள்கி3னும் நுறு ஸொக
பொ4ரெ ஸிங்காரு ரதி ஸொகஸேஹா (நொவ்ரிக)

_______________________________________________________
ஜக3து அளினும் ஸிம்ஹுக
உலக பெண்களில் சிங்கமாய்

நொவ்ரிக அவத்த அளி கோனு
மணமகளாய் வரும் பெண் யாரோ
மொன்னு பொ4வ்ரி ஐகய்ஹா ஸங்கெ தா4னு
மனம் நிறைந்து சொல்வதை கேட்டு நடப்பாளோ?

கு3ணவதி ஸொக குங்கும் க4ல்லய்ஹா – அம்ர
குணவதியாய் குங்குமம் தரிப்பாளோ! - நம்
கொப்பான் தே3வுனுகு பாய்ம் பொள்ளய்ஹா (நொவ்ரிக)
நடன கோபால நாயகி சுவாமிகளை வணங்கிடுவாளோ?

வெக்கிஹெடெ3 மொதி ஸொக3
தேடியெடுத்த முத்தை போல்!
லிக்கி ரியெ நீதி ஸம்பு
எடுத்து எழுதப்பட்ட நீதி ஸம்புவோ?
ர:க்கி ரீ:கின் இகித்தெனொஹா
காத்திருந்தவர்கள் எத்தனைபேரோ
துக்கி மொன்னும் தொவ்லிரித்தெனாஹா (நொவ்ரிக)
மனதில் உயரத்தில் வைத்துக்கொண்டவளோ?

தே3ஸு ப4க்திம் பெ4ளி தீ4ருக
தேசபக்தியில் ஆனித்திரமாய்
சித்தூர் ராணி பத்மினிக
சித்தூரின் ராணி பத்மினியாய்
ஜக3து அளினும் ஸிம்ஹுக
உலகத்து பெண்களில் சிங்கமாய்
ஜான்ஸி ராணி ஸொக ரா:ய்ஹா (நொவ்ரிக)
ஜான்ஸி ராணியாய் இருப்பாளோ?

வாஞ்சனா மாயி ஸொக
வாஞ்சனையில் தாயைபோல்
வத்தாம் தூ3து ச்ஸொக
பேச்சில் தூதனை போல்
பொள்கி3னும் நு:ரு ஸொக
பழகுவதில் குழந்தையை போல்
பொ4ரெ ஸிங்காரு ரதி ஸொகஸேஹா (நொவ்ரிக)
அழகு நிறம்பிய ரதியை போல் இருப்பாளோ?

உலக பெண்களில் சிங்கமாய்

மணமகளாய் வரப்போகும் பெண் யாரோ
மனம் நிறைந்து சொல்வதை கேட்டு நடப்பாளோ?

குணவதியாய் குங்குமம் தரிப்பாளோ! - நம்
நடன கோபால நாயகி சுவாமிகளை வணங்கிடுவாளோ? (மணமகளாய்)

தேடியெடுத்த முத்தை போல்!
எடுத்து எழுதப்பட்ட நீதி ஸம்புவோ?
காத்திருந்தவர்கள் எத்தனைபேரோ
மனதில் உயரத்தில் வைத்துக்கொண்டவளோ? (மணமகளாய்)

தேசபக்தியில் ஆனித்திரமாய்
சித்தூரின் ராணி பத்மினியோ?
உலகத்து பெண்களில் சிங்கமாய்
ஜான்ஸி ராணியாய் இருப்பாளோ? (மணமகளாய்)

வாஞ்சையில் தாயைபோல்
பேச்சில் தூதனை போல்
பழகுவதில் குழந்தையை போல்
அழகு நிறம்பிய ரதியை போல் இருப்பாளோ? (மணமகளாய்)

No comments: